Home /News /viluppuram /

திராவிட மாடல் ஆட்சியை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது - கி.வீரமணி

திராவிட மாடல் ஆட்சியை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது - கி.வீரமணி

கி. வீரமணி

கி. வீரமணி

Villupuram: திமுக அடிப்படையிலேயே சமூதாய சீர்திருத்தத்தை முன்னிருத்தும் அரசியல் கட்சி, இது தான் திராவிட மாடல் என்று கி.வீரமணி கூறினார்.

    திராவிட ஆட்சி மணல் கோட்டை அல்ல இரும்புக்கோட்டை என்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற பகுத்தறிவாளர் மாநாட்டில்  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியுள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழா நிறைவு மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், அமைச்சர்கள் எ.வ.வேலு. மஸ்தான் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டர்.

    நிகழ்ச்சியில் அம்பேத்கர், பெரியார், கலைஞர், சாவித்திரிபாய் பூலே, நாகம்மை, மணியம்மை ஆகியோரின் புகைப்படங்கள் திறந்து வைக்கப்பட்டன. தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் எடைக்கு எடை காசு கொடுக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரன், இந்தியாவில் தற்போது புல்டோசர் ஆட்சி நடைபெறுகிறது. அடுத்தது அக்னி ஆட்சி தொடங்கியுள்ளது. நாட்டை அக்னி நாடாக மாற்றிவிட்டார்கள். முன்பு பாபர் மசூதியை இடித்தார்கள் இன்று பாபரை ஏற்றுக்கொண்டவர்களின் வீடுகளை இடிக்கிறார்கள்.

    நாட்டில் பகுத்தறிவு பேசியர்கள் நான்குபேரை சுட்டுக்கொன்றுள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக பேசினால் தேசத்துரோக குற்றம் சுமத்துவார்கள், தற்போது வீட்டை இடிக்கிறார்கள். அக்னிபத் திட்டத்தில் நான்கு ஆண்டுகள் மட்டுமே வேலை கொடுக்கிறார்கள். இதனால் நாடு தீப்பற்றி எறிகிறது. ஏற்கனவே இரண்டு கோடி பேருக்கு வேலை தறுவதாக கூறினார்கள் ஆனால் வேலை தரவில்லை, தற்போதுதான் நாட்டு மக்கள் எவ்வளவு மோசமான ஆட்சி என்பதை புரிந்துக்கொண்டுள்ளனர் என்று பேசினார்.

    அதனை தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாட்டில் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பும் பணியில் பெரியாரும், அண்ணாவும் இணைந்து செயல்பட்டனர். ஆனால் நாட்டின் விடுதலையில் இருவரும் இருவேறு கருத்துக்களை கொண்டிருந்தனர். இந்தியா விடுதலை அடைந்தபோது விடுதலையை மக்களிடம் ஒப்படைக்கவில்லை, பார்ப்பனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பழந்தமிழர் காலத்தில் சாதியில்லை, வர்னாசிரமம் இல்லை. ஆரிய கலாச்சாரம் ஊடுருவி மன்னர்கள் காலத்தில் அவர்கள் செய்த வரலாற்று பிழை தான் தமிழ்ச்சமூகம் வீழ்ச்சிக்கு காரணம், இதனை புரிந்துகொண்டவர்களில் ஒருவர் அம்பேத்கர், மற்றொருவர் பெரியார். திராவிடம் என்பது இந்தியா முழுவதும் ஆரியத்திற்கு எதிரான கருத்தியல் என்று கூறினார்.

    இறுதியாக உரையாற்றிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காவி கட்சிகள் நாங்கள் பலமாக இருப்பதாக கூறிக்கொண்டு திராவிட மாடல் ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என கூறிவருகின்றனர். எந்த கொம்பனாலும் திராவிட மாடல் ஆட்சியை அசைத்து பார்க்க முடியாது. இது மணல் கோட்டை அல்ல இரும்புக்கோட்டை.

    எங்களிடம் மோதினால் அவர்களின் மண்டை உடையும் ஆனால் கோட்டையில் உடையாது. திமுகவுக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு என்பது, திமுக அடிப்படையிலேயே சமூதாய சீர்திருத்தத்தை முன்னிருத்தும் அரசியல் கட்சி. இது தான் திராவிட மாடல் என பேசினார்.

    Must Read : 10th, 12th பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு... தெரிந்துகொள்வது எப்படி?

    இந்த மாநாட்டில் விழுப்புரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான திராவிடர் கழக தொண்டர்கள் கலந்துக்கொண்டனர். முன்னதாக மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி செஞ்சி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியா நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தில் நிறைவடைந்தது.

    செய்தியாளர் - ஆ.குணாநிதி, விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: DMK, Dravidam, K.Veeramani, Villupuram

    அடுத்த செய்தி