முகப்பு /செய்தி /விழுப்புரம் / விழுப்புரத்தில் பிரபல ஷாப்பிங் மாலில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை... மாலில் இருந்த பொதுமக்கள், பணியாளர்கள் வெளியேற தடை..

விழுப்புரத்தில் பிரபல ஷாப்பிங் மாலில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை... மாலில் இருந்த பொதுமக்கள், பணியாளர்கள் வெளியேற தடை..

விழுப்புரத்தில் பிரபல ஷாப்பிங் மாலில் வருமான வரித்துறை  சோதனை

விழுப்புரத்தில் பிரபல ஷாப்பிங் மாலில் வருமான வரித்துறை சோதனை

Viluppuram | விழுப்புரத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஷாப்பிங் மாலில் இருந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு சற்று பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் உள்ள புதுச்சேரி செல்லும் சாலையில் மகாலட்சுமி பிளாசா என்ற பெயரில் மிகப் பெரிய அளவிலான ஷாப்பிங் மால் இயங்கி வருகிறது. இந்த ஷாப்பிங் மாலுக்குள் சினிமா தியேட்டர், சூப்பர் மார்க்கெட், தங்கும் விடுதி, உணவகங்கள், குழந்தைகள் விளையாட்டு அரங்கம், ஜவுளிக் கடை உள்ளிட்ட பல்வேறு விதமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக நிறுவனங்களில் மட்டும் 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நாள்தோறும் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் இந்த ஷாப்பிங் மாலில் வருமானத்திற்கு ஏற்ப உரிய வரி செலுத்தப்படுவதில்லை என புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகாலட்சுமி பிளாசா என்ற பிரபல ஷாப்பிங் மாலில் காலை 10.30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கியிருக்கின்றனர்.

5க்கும் மேற்பட்ட கார்களில் வந்திருந்த 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், ஷாப்பிங் மாலிற்குள் அதிரடியாக நுழைந்து தனித்தனி குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பிற்காக உள்ளூர் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு ஷாப்பிங் மாலில் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஷாப்பிங் மாலிற்குள் பொருட்களை வாங்க வந்த வாடிக்கையாளர்களையும், ஷாப்பிங் மாலில் பணியாற்றி வரும் பணியாளர்களையும் வெளியே செல்லவும், வெளியே இருந்து உள்ளே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. இதேப்போல் பிரபல வணிக நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு சொந்தமான விழுப்புரத்தில் உள்ள வீடுகள் மற்றும் பள்ளியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also see...மொபைல் பே நிறுவனத்துக்கு விதிக்கபட்ட  இடைக்கால தடை நீட்பு...

பிரபல வணிக நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளார்: ஆ.குணாநிதி,விழுப்புரம்

First published:

Tags: IT Raid, Villupuram