ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் காரில் மனித மண்டை ஓடு- ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி

விழுப்புரத்தில் காரில் மனித மண்டை ஓடு- ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி

காரில் மண்டையோடு

காரில் மண்டையோடு

ஏலம் விட  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மண்டை ஓட்டு கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Viluppuram, India

  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மதுவிலக்கு காவல்துறை சார்பில் ஏலம் விடப்படும் வாகனத்தில் மண்டை ஓடு இருந்ததால் ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் மதுகடத்தலில் பிடிப்பட்ட 28 வாகனங்கள் நேற்று மரக்காணம் காவல் நிலையத்தில் ஏலம் விடப்பட்டது. இந்நிலையில் ஏலம் விட  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் மனித மண்டை ஓடு இருந்துள்ளது.

  இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மரக்காணம் காவல்துறையில் விசாரித்தபோது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே மரக்காணம் காப்பு காட்டில் மர்மமான முறையில் பெண் சடலம் அழுகிய நிலையில் மண்டை ஓடு கிடந்ததுள்ளது.

  இதையும் படிங்க: கல்லூரியில் படிக்கும்போதே காதல்.. லெஸ்பியன் உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு- மாணவி தற்கொலை முயற்சியால் பரபரப்பு

  இதனை கைப்பற்றி விசாரணைக்காக எடுத்து வந்து மரக்காணம் காவல்துறையினர் பாதுக்காப்புக்காக காவல் நிலையம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில்  வைத்திருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காரில் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Car, Villupuram