ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் பட்டப்பகலில் வீடு, கோயிலில் கொள்ளை... பெண் உட்பட 3 பேருக்கு வலை..!

விழுப்புரத்தில் பட்டப்பகலில் வீடு, கோயிலில் கொள்ளை... பெண் உட்பட 3 பேருக்கு வலை..!

விழுப்புரத்தில் நடந்த கொள்ளை சம்பவம்

விழுப்புரத்தில் நடந்த கொள்ளை சம்பவம்

Viluppuram District News : செஞ்சி அருகே பட்டப்பகலில் வீடு மற்றும் கோயில்களில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் 10 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கோணை கிராமத்தில் வசித்து வருபவர் ஓட்டல் மாஸ்டர் சண்முகம். இவரின் வீட்டில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதேபோல் அதே கிராமத்தில் உள்ள இரண்டு முனீஸ்வரன் கோயில்களில் உண்டியல்களையும் கொள்ளையடித்து திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அனந்தபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், அங்கு வந்த அனந்தபுரம் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த  ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேரை சந்தேகத்தின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க : ’கோன் பனேகா குரோர்பதி...’ : அமிதாப் பச்சன் பெயரில் பண மோசடி! - புதுச்சேரியில் நடந்த பகீர் சம்பவம்!

பட்டப்பகலில் அடுத்தடுத்து ஒரு வீடு மற்றும் இரண்டு கோயில்களில் திருட்டு சம்பவம் நடைபெற்ற சம்பவம்  செஞ்சி சுற்றுவட்டார பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - குணாநிதி 

First published:

Tags: Crime News, Local News, Vizhupuram