இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆ.ராசா பேசியதாக செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘வம்ப விலைக்கு வாங்கி விட பாக்கீறீங்களா' எனக் கேட்டவாறு மதுரை ஆதினம் செய்தியாளர்கள் சந்திப்பினை புறக்கணித்து சென்றார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள கிருபாபுரீஸ்வரர் ஸ்ரீ மங்களாம்பிகை ஆலயத்தில், மதுரை ஆதின மடத்தின் 293வது ஆதினமாக விளங்க கூடிய ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சாமி தரிசனம் செய்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பு நடைபெற்றது. அப்போது மதுரை ஆதினத்திடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்கள் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.
உங்கள் துறையில் முதல்வர் - காவலர்களிடம் மனுக்களைப் பெறுகிறார் ஸ்டாலின்
இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது எனவும் வம்ப இழுத்து விலைக்கு வாங்கி விட போறீங்களா என கேட்டுவிட்டு செய்தியாளர்களை நான் அழைக்கவில்லை என கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பினை புறக்கணித்து சென்றார்.
அப்போது ஆதினத்தின் உடன் வந்த பாஜகவினர் செய்தியாளர்களிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.
திராவிடர் கழக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக எம்.பி. ஆ.ராசா, ‘இந்துவாக இருக்கின்ற வரையில் நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கின்ற வகையில் நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள்’ என சனாதனம் மற்றும் மனுதர்மம் குறித்து பேசியிருந்தார்.
ஆ.ராசாவின் இந்த பேச்சு மாநிலம் முழுவதும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வலது சாரி அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Madurai Adhinam