விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.
மிகப்பெரிய பள்ளி என்ற பெருமை பெற்றாலும் மாணவர்களிடையே ஒழுக்கம் இல்லை என்ற குறைபாடு இருந்து வந்தது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் கட்டுபடாமல் மோசமான சிகை அலங்காரம், கையில் வண்ண கயிறுகள் கட்டுதல், மாணவிகள் தலைமுழுவதும் பூ வைத்தும் மற்றும் முக அலங்காரம் செய்தும் பள்ளிக்கு வருகிறார்கள். இவற்றை தடுக்க பெற்றோருக்கு ஆசிரியர்கள் தரப்பில் கூறியும் பிள்ளைகள் தங்களுக்கு கட்டுப்படவில்லை என பெற்றோர் கைவிரித்தனர்.
இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜவியர் சந்திரகுமார், இன்று அதிரடி முடிவை எடுத்தார். அவரே கையில் கத்தரிக்கோல் மற்றும் எண்ணெயுடன் பள்ளியின் நுழைவு வாயிலில் நின்று கொண்டு வரும் மாணவர்களை தடுத்து நிறுத்தி தலையில் எண்ணை தேய்ப்பது, முடி வெட்டுவது மற்றும் கையில் கயிறு இருந்தால் அவற்றை அறுத்து எறிவது என செயல்பட்டார். மாணவிகள் அதிக பூ வைத்துக்கொள்ளக்கூடாது, அலங்காரம் செய்து வரக்கூடாது அனைவரும் சமமாக உடை அணிந்து வர வேண்டும் என வலியுறுத்தினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மாணவர்கள் சிலர் போதைக்கு அடிமையாகி முறையாக பள்ளிக்கு வருவதில்லை, ஆசிரியர்களுக்கு கட்டுப்படுவதில்லை, பெற்றோரிடம் வரம்புமீறி செயல்படுகிறார் என்ற புகார்கள் வந்த நிலையில் தலைமை ஆசிரியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இப்பள்ளியில் எதற்கும் கட்டணம் வசூல் கிடையாது. பள்ளி பராமரிப்பிற்கான பெற்றோர் மற்றும் மாணவர்களே விரும்பி நன்கொடை வழங்க குடம் வைக்கப்பட்டுள்ளது. சாட்டை படத்தில் சமுத்திரகனி செயல்படுவது போல் தலைமை ஆசிரியரின் இந்த நடவடிக்கை பெற்றோர் மத்தியிலும் ஊர் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்பள்ளிக்கு 6 மாதத்துக்கு முன்பு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற ஜவியர் சந்திரகுமார், தமிழகத்தில் இவ்வளவு மோசமான பள்ளி இல்லை. இன்னும் சில மாதங்களில் மிக தரமான பள்ளியாக மாற்றுவேன் என உறுதி பூண்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Villupuram