ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் நாளை மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு முகாம்

விழுப்புரத்தில் நாளை மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு முகாம்

மாற்றுத் திறனாளி

மாற்றுத் திறனாளி

Viluppuram District | விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் மாற்று திறனாளிகளின் பிரச்னைகள் மற்றும் குறைகளையும் சரி செய்யும் விதமாக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் மாற்றுத் திறளானிளின் குறைகளை தீர்க்கும் விதமாக ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநகர் முன்னிலையில் முகாம் நடத்தப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்க குறைதீர் கூட்டம் நடத்தும் விதமாக சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நடத்தப்படும் இந்த முகாமில், மாற்றுத் திறனாளிகள் தங்களது குறைகளை எழுத்துப்பூர்வமாகவோ அல்லது நேரடியாகவோ உரிய ஆவணங்களுடன் (மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல், நகல்) தெரிவித்து, தங்களது பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம்.

Must Read : கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

First published:

Tags: Local News, Physically challenged, Villupuram