ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவன்.. மதுபோதையில் அட்டகாசம்.. விழுப்புரத்தில் சம்பவம்

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவன்.. மதுபோதையில் அட்டகாசம்.. விழுப்புரத்தில் சம்பவம்

அரசு பள்ளி தலைமையாசிரியரின் மண்டையை உடைத்த மாணவன்

அரசு பள்ளி தலைமையாசிரியரின் மண்டையை உடைத்த மாணவன்

Viluppuram News : விழுப்புரத்தில் மதுபோதையில் அரசுப்பள்ளிக்கு வந்த மாணவன் தலைமை ஆசிரியரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Viluppuram, India

  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகியதாக கூறப்படுகிறது.இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சேவியர் ராமச்சந்திரன் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக தினந்தோறும் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி மனநல சிகிச்சை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்.

  இந்நிலையில், பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் நேற்று மது போதையில் பள்ளிக்கு வந்ததோடு மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசியுள்ளான். இதனையடுத்து மாணவிகள் தலைமை ஆசிரியரிடத்தில் புகார் அளிக்கவே மாணவனை அழைத்து கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தலைமை ஆசிரியரை தலையில் தாக்கியுள்ளான்.

  இதையும் படிங்க : சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்... அமைச்சர் தகவல்

  இச்சம்வத்தில் தலைமை ஆசிரியரின் பின்பக்க மண்டை பகுதியில் கிழித்து கொண்டு ரத்தம் வெளியேறியது. இதையடுத்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் தலைமை ஆசிரியர் சிகிச்சை பெற்று கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

  மாணவனின் ஒழுங்கீன செயலால் மாணவனால் தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டு மண்டையில் உடைப்பு ஏற்பட்டது குறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் கண்டமங்கலம் காவல்துறையினர் மாணவனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

  இதையும் படிங்க : `திராவிடம் ஒரு இனமே இல்லை, ஆங்கிலேயர்கள் அப்படி சொன்னது தவறு' - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

  பள்ளி கல்வி துறை நிர்வாகம் சார்பில் அந்த மாணவனை கண்டமங்கலம் அரசு பள்ளியிலிருந்து வளவனூர் அரசு பள்ளிக்கு மாற்றம் செய்துள்ளது.

  செய்தியாளர் : குணாநிதி - விழுப்புரம்

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Vizhupuram