விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டநாள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகிலுள்ள கூனிமேடு கிராமத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், வானூர், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க 1502.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு கடந்த அதிமுக ஆட்சியில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன் ஆரம்ப கட்ட பணிகளும் துவக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த 5 மாதத்தில் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கடந்த 13ஆம் தேதி விழுப்புரம் காந்தி சிலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டார்.
இந்நிலையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டததை கண்டித்தும், மீண்டும் அந்த திட்டத்தை கொண்டுவர வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகில் சிவி.சண்முகம் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
Also see... சபரிமலை மேற்கூரையை செப்டம்பர் 7ம் தேதிக்குள் சரி செய்ய வேண்டும்....
இந்த உண்ணாவிர போராட்டத்தில் திண்டிவனம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுணன், வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துக் கொண்டுள்ளனர்.
உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் சிவி சண்முகம் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்ட வாய்ப்புள்ளது. 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CV Shanmugam, Drinking water, Villupuram