ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

மது போதையில் அரசு பள்ளியை சேதப்படுத்திய கல்லூரி மாணவர்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி!

மது போதையில் அரசு பள்ளியை சேதப்படுத்திய கல்லூரி மாணவர்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி!

பள்ளியை சேதப்படுத்திய கல்லூரி மாணவர் கைது

பள்ளியை சேதப்படுத்திய கல்லூரி மாணவர் கைது

வீடியோ வைரலான நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மது போதையில் அரசு பள்ளியை சேதப்படுத்திய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபும் அருகிலுள்ளா வீரங்கிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே ஊரை சேர்ந்த 5 இளைஞர்கள் மது அருந்தியுள்ளனர்.

அப்போது மதுபோதை தலைக்கேரிய நிலையில் இளைஞர்கள் வகுப்பறை கட்டிடத்தை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் பெரிய கருங்கல்லை தூக்கி வகுப்பறை கதவின் மீது வீசி உடைக்க முயற்சித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் வேகமாக பரவிய நிலையில் பல தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

ALSO READ | தனியாக இருக்கும் பெண்கள் தான் ஒரே குறி.. சினிமா பாணியில் கைவரிசை காட்டி வந்த நபர் கைது

இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கண்டாச்சிபுரம் காவல்துறையினர் அதே ஊரை சேர்ந்த கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் ஏழுமலை(20) என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரபாகரன், நாராயணான் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்.

First published:

Tags: Local News, Viluppuram S22p13