Home /News /viluppuram /

திண்டிவனத்தில் பாஜக இளைஞரணி சார்பாக ரத்த தான முகாம்..

திண்டிவனத்தில் பாஜக இளைஞரணி சார்பாக ரத்த தான முகாம்..

விழுப்புரம்

விழுப்புரம் பாஜக

Villupuram District News | விழுப்புரம் அடுத்த திண்டிவனத்தில் பாஜக இளைஞரணி சார்பாக பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram
விழுப்புரம் அடுத்த திண்டிவனத்தில் பாஜக இளைஞரணி சார்பாக பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த செப்டம்பர் 17ம் தேதி 72வது பிறந்த நாள். பிரதமரின் பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ரத்த தானம் உள்ளிட்ட மருத்துவ முகாம்களை நடத்தியும் பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாஜக இளைஞரணி மற்றும் லயன்ஸ் கிளப்  இணைந்து  திண்டிவனம் குஷால்சந்த் மேல்நிலை பள்ளியில் ரத்ததாண முகாம் நடத்தினர். இந்த ரத்ததான நிகழ்ச்சியானது  பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் ஜீவா  தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் அளித்தனர்.

ரத்த தானம் குறித்து பாஜகவினர் கூறுகையில்,

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விக்கிரவாண்டி,  கண்டமங்கலம் விழுப்புரம் போன்ற பல பகுதிகளில் ரத்த தானம்  முகாம் நடைபெற்று வருகிறது. காலை முதல்  ரத்ததானம் செய்வதற்கு தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆர்வம் காட்டினர்.  நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்துள்ளனர்.

ரத்த தானம் செய்வது மற்றவர்களுக்கு உயிர் அளிப்பது போன்றதாகும் எனவே அனைவரும் ரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும் என தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ரத்ததான சிறப்பு முகாமில்,  மாநில இளைஞர் அணி செயளாளர் தினேஷ்குமார் மற்றும் மாநில வர்த்தக பிரிவு துணை தலைவர் ஜின்ராஜ் மற்றும் லயன்ஸ் கிளப்  நிர்வாகி சுரேஷ்  செந்தில், நகர தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்., மேலும் இளைஞர் அணி மாவட்ட துனை தலைவர் சுகுமார் , பட்டியல் அணி மாவட்ட பொருளாளர் ராதிகா, இளைஞரணி நகரதலைவர் ரகு மற்றும் பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Published by:Arun
First published:

Tags: BJP, Local News, Modi, Villupuram

அடுத்த செய்தி