ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் பிரதோஷ வழிபாட்டில்  திரளான  பக்தர்கள் பங்கேற்பு 

விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் பிரதோஷ வழிபாட்டில்  திரளான  பக்தர்கள் பங்கேற்பு 

விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் பிரதோஷ வழிபாடு

விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் பிரதோஷ வழிபாடு

Villupuram prathosam | விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோ‌ஷ பூஜை வெகு விமர்சையாக  நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆதிவாலீஸ்வரர் கோயிலில்  பிரதோ‌ஷ விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆதிவாலீஸ்வரர் கோயிலில்  பிரதோ‌ஷ விழா மாலை மணி முதல் மூலவருக்கும், நந்தி பெருமானுக்கும் பிரதோ‌ஷ கால பூஜை நடைபெற்றது.  பால், தயிர், பன்னீர், சந்தனம், விபூதியால்  அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும்  சந்தனம் பூ போன்ற பல வகையில் நந்திக்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டது.  பின்னர் மாலை 6 மணியளவில் மகா தீபாராதனையை தொடர்ந்து ரி‌ஷப வாகனத்தில் உற்சவர் கோயிலை சுற்றி வலம் வந்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.  இதேபோல் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள கைலாசநாதர் கோயில், பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் கோயில், கீழ்ப்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவயில் உள்ளிட்ட விழுப்புரம் பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோ‌ஷ பூஜை வெகு விமர்சையாக  நடைபெற்றது.

First published:

Tags: Local News, Villupuram