ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டுகள்... விழுப்புரத்தை அதிரவைத்த சம்பவம்..!

அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டுகள்... விழுப்புரத்தை அதிரவைத்த சம்பவம்..!

கைதானவர்கள்

கைதானவர்கள்

Country Bomb : விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே மதுப்போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடியான கவுதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள தனது நண்பர்களான கபிலன், சத்யராஜ் ஆகியோரை சந்திப்பதற்காக நேற்று இரவு எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது 3 பேரும் எஸ்.மேட்டுப்பாளையத்தில் உள்ள தென்பெண்ணையாற்று மேம்பாலத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுப்போதை தலைக்கேறியதில் கவுதமிற்கும், கபிலனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுதம், தான் மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து கபிலன் மீது வீசியதாக கூறப்படுகிறது. அப்போது நாட்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.

இதில் கபிலன், சத்யராஜ் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இரவு நேரத்தில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் தென்பெண்ணையாற்று மேம்பால பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது மதுப்போதையில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த கவுதம், கபிலன், சத்யராஜ் உள்ளிட்ட 3 பேரையும் பிடித்து வைத்து கொண்டு வளவனூர் போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வளவனூர் போலீசார் கிராம மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிடிபட்டவர்களில் கவுதம் புதுச்சேரியில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் நீதிமன்றத்தில் இருந்த போலீசாரின் துப்பாக்கியை திருடி சென்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி என்பது தெரியவந்தது. இதனையடுத்து கவுதம், கபிலன் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து வளவனூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுப்போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நாட்டுவெடி குண்டுகளை வீசி தாக்கி கொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : குணாநிதி - விழுப்புரம்

First published:

Tags: Crime News, Local News, Villupuram