Home /News /viluppuram /

திருடப்பட்ட பைக்கை திருப்பிக் கேட்ட கல்லூரி மாணவர் அடித்துக்கொலை - விழுப்புரத்தில் பயங்கரம்

திருடப்பட்ட பைக்கை திருப்பிக் கேட்ட கல்லூரி மாணவர் அடித்துக்கொலை - விழுப்புரத்தில் பயங்கரம்

கல்லூரி மாணவர் கொலை

கல்லூரி மாணவர் கொலை

Villupuram : விழுப்புரம் அருகே திருடப்பட்ட தனது இருசக்கர வாகனத்தை திருப்பி கேட்ட கல்லூரி மாணவர் அடித்துக்கொலை செய்து உடலை கிணற்றில் வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே, திருடப்பட்ட தனது இருசக்கர வாகனத்தை திருப்பி கேட்ட கல்லூரி மாணவர் அடித்துக்கொலை செய்யட்டுள்ளார். இந்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருவெண்ணைநல்லூர் அருகிலுள்ள டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் அருண் (21). இவர் விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவரின் இருசக்கர வாகனம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கானாமல் போயியுள்ளது.தனது வாகனம் திருடப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் தேடிவந்துள்ளனர். இந்நிலையில்,  இவருடைய இருசக்கர வாகனத்தை அதே கிராமத்தைச் சார்ந்த சரத்வீரமணி (21), சத்தியராஜ் (20),  மற்றும் இரண்டு  சிறுவர்கள் ஆகியோர்  திருடியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

    இந்த 4 பேரும் இருசக்கர வாகன திருட்டு, கஞ்சா போதை பழக்கம், கஞ்சா விற்பனை செய்பவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்களிடம் அருண் தனது வாகனம் குறித்து கேட்டுள்ளார். அருணுக்கும் மற்ற இளைஞர்களுக்கும்  முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.அப்போது, இருசக்கர வாகனத்தை நாங்கள் தான் திருடியுள்ளோம் என்றும் திருப்பி தந்துவிடுகிறோம் எனவும் அவர்கள் கூறியதை அருண் பதிவு செய்து வந்துள்ளார். அதனை காவல்துறையினரிடம் கொடுத்து புகார் அளிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

    இதனால், ஆத்திரம் அடைந்த நான்கு பேரும், அருணிடம் இருசக்கர வாகனத்தை தருவதாக் கூறி ஏமாற்றி அழைத்து சென்று, பனப்பாக்கம் ஏரி பகுதியில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் அருண் உடலை அருகில் இருந்த கினற்றில் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இந்நிலையில்,  அந்த இளைஞள் ஒருவர் கஞ்சா போதையில் அருணை கொலை செய்ததை கிராமத்தில் கூறியுள்ளார்.

    இந்த தகவலின் பேரில் கிராம மக்கள் ஒன்று திரண்டு அந்த நான்கு பேரையும் பிடித்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் தீயணைப்புத்துறை உதவியுடன் அருண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த கொலை தொடர்பாக  சரத்வீரமணி , சத்தியராஜ் மற்றும் இரண்டு சிறுவர்கள் ஆகிய நான்குபேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சிறுவர்கள் என்பதால், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் சிறையில் அடைக்கட்டனர். தொடர்ந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Must Read : முதல் முறையாக விமானத்தில் பறக்கிறோம்.. ஈஷா யோகா மையத்திற்கு நன்றி தெரிவித்த பழங்குடியின மக்கள்

    இந்நிலையில், கல்லூரி மாணவன் உடலை பிரேத பரிசோதனை உடனடியாக பண்ணக்கூடாது என்றும், தங்களிடம் காண்பித்துவிட்டு பிறகு தான் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரி, இறந்த கல்லூரி மாணவரின் உறவினர்கள் திருக்கோவிலூர்- திருவெண்ணைநல்லூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே பரபரப்பு நிலவியது. அவர்களிடம் காவல்துறையினரின் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

    மேலும், கொலை செய்த நான்குபேரும் கஞ்சா பழக்கம் உடையவர்கள் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளதால் அதுகுறித்தும் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றானர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - ஆ.குணாநிதி, விழுப்புரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Bike Theft, College student, Crime News, Murder, Villupuram

    அடுத்த செய்தி