விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் திட்டம் தொடர்பாக கலெக்டர் முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். அதில், பிரதமரின் கவுரவ நிதியுதவி (PM Kisan) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகள், வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில், 4 மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், தங்கள் ஆதார் விவரங்களை சரிசெய்தால் மட்டுமே 13வது தவணைத் தொகையைப் பெற முடியும். விழுப்புரம் மாவட்டத்தில் 33 ஆயிரம் விவசாயிகள், தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாமல் உள்ளனர்.
பி.எம்.கிசான் நிதி திட்டத்தில் பயனடையும் விவசாயிகளில், ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை ஏற்கனவே இணைத்துள்ளவர்கள், www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் ஆதார் எண் விபரத்தினை உள்ளீடு செய்தால், ஓ.டி.பி., எண் மொபைல் போனுக்கு அனுப்பப்படும். அந்த எண்ணை உள்ளீடு செய்து ஆதார் விபரங்களை சரிபார்த்து உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதுநாள் வரை ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்குச் சென்று விரல் ரேகையினை பதிவு செய்து, பி.எம்.கிசான் திட்ட இணையதளத்தில் ஆதார் விபரங்களைப் பதிவு செய்யலாம். அஞ்சல் அலுவலகம் மூலமும், பதிவு செய்து கொள்ளலாம்.
Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?
மேலும், வேளாண்மை உதவி இயக்குனர்கள் அனைத்து கிராமங்களிலும் இது குறித்து சிறப்பு முகாம் நடத்தி வருவதால், அனைத்து விவசாயிகளும் வரும் 15ஆம் தேதிக்குள் ஆதார் விவரங்களைப் பதிவு செய்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, PM Kisan, Villupuram