வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட பணத்தை மீட்பது தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் இணையதள குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) போலீஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தினமும் சைபர் கிரைம் குற்றவாளிகளால் பொதுமக்கள், பணத்தை இழந்து வருகின்றனர். உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் இதில் நிறையபேர் இருக்கலாம்.
எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் குற்றவாளிகள் எப்படியாவது ஏமாற்றி பொதுமக்கள், வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சேமித்த மொத்த பணத்தையும் திருடி விடுகின்றனர். 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு உடனே புகார் செய்தால் இழந்தை பணத்தை மீட்கலாம் என்ற விவரம் பலருக்கு தெரிவதில்லை.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தாமதமாக புகார் அளித்தால் பணத்தை மீட்பது கடினம். அறிமுகம் இல்லாத யாராவது ஒருவர், செல்போனில் தொடர்புகொண்டு பேசினால் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மக்களின் விழிப்புணர்வுக்காக இந்திய அரசு, cybersafe.gov.in என்ற வலைதளத்தில் இதுவரை பதிவான குற்றவாளிகளின் செல்போன் எண், வங்கி கணக்கு எண், UPI முகவரி ஆகியவை சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
Must Read : சாபங்கள் நீங்க குமரியில் வழிபடவேண்டிய குகநாதீஸ்வரர் கோவில் - முருகன் தோஷம் நீங்க சிவனை வழிபட்ட தலம்
உங்களை தொடர்பு கொண்டவரின் செல்போன் எண், வங்கி கணக்கு எண், UPI முகவரி ஆகியவற்றை cybersafe.gov.in என்ற வலைதளத்தில் ஒருமுறை சோதித்து பார்த்துக் கொள்ளலாம். குற்றங்கள் பற்றி புகார் அளிக்க சப்-இன்ஸ்பெக்டர் 94982 02106 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyber crime, Local News, Villupuram