முகப்பு /செய்தி /விழுப்புரம் / 13 வருட காதல்.. ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம் - கைவிட நினைத்த காதலனை கம்பி எண்ண வைத்த காதலி

13 வருட காதல்.. ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம் - கைவிட நினைத்த காதலனை கம்பி எண்ண வைத்த காதலி

ராணுவ வீரரை கைது செய்து அழைத்து செல்லும் போலீசார்

ராணுவ வீரரை கைது செய்து அழைத்து செல்லும் போலீசார்

Viluppuram | விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான சிலம்பரசன் (35) இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும்  2010-ஆம் ஆண்டு முதல் சுமார் 13 வருடங்காலம் காதலித்து வந்துள்ளனர். ராணுவ பணியில் சேர்வதற்கு முன்பிருந்தே சிலம்பரசன் அந்தப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார்.

இதன் பின்னர் ராணுவத்தில் பணியில் சேர்ந்த பின்பும்  தொலைபேசியில் அடிக்கடி பேசி வந்த நிலையில் விடுமுறையில் வரும் போதெல்லாம் அந்தப்பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உள்ளார். மேலும் அவரது ரெட்டிபாளையம் வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து தனிமையில் உறவு கொண்டு உல்லாசமாக இருந்துள்ளார்.

இதே போல் விடுமுறையில் வரும் போதெல்லாம் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் தற்போது விடுமுறையில் வந்துள்ள சிலம்பரசனிடம் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி  திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த சிலம்பரசன் அந்தப்பெண்ணை ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசியுள்ளார்.

Also see... ஈபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? ஓபிஎஸ்

இதனால் அதிர்ச்சியடைந்தவர் ராணுவ வீரரான சிலம்பரசன் மீது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் சிலம்பரசனை கைது செய்தனர்.

செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்     

First published:

Tags: Crime News, Love issue, Villupuram