முகப்பு /செய்தி /விழுப்புரம் / பச்சிளம் பெண் குழந்தை ஏரிக்கரையில் வீசி சென்ற கொடூரம் - விழுப்புரத்தில் அதிர்ச்சி

பச்சிளம் பெண் குழந்தை ஏரிக்கரையில் வீசி சென்ற கொடூரம் - விழுப்புரத்தில் அதிர்ச்சி

மாதிரி படம்

மாதிரி படம்

தொப்புள் கொடியுடன் இருந்த குழந்தையை சால்வையில் சுற்றி பையில் வைத்து ஏரிக்கரை ஓரமாக வீசி சென்றுள்ளது தெரியவந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அருகேயுள்ள கோனூர் எரிக்கரையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை ஏரிக்கரையில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகேயுள்ள கோனூர் கிராமத்தில் ஏரிக்கரையில் மாடு மேய்த்து கொண்டிருப்பவர்கள் அவ்வழியாக சென்றபோது பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் கடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். குழந்தை இறப்பு குறித்து அப்பகுதியினர் காணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிக்க : அன்புஜோதி ஆசிரமத்தில் நடந்த அதிர்ச்சி.. தப்பிச் சென்ற பெண்ணின் பகீர் வாக்குமூலம்!

தொப்புள் கொடியுடன் இருந்த குழந்தையை சால்வையில் சுற்றி பையில் வைத்து ஏரிக்கரை ஓரமாக வீசி சென்றுள்ளது தெரியவந்தது. அதனை தொடர்ந்து குழந்தையின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக  விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரனையில் குழந்தை பிறந்து மூன்று மணி நேரமே ஆன நிலையில் தொப்பிள் கொடியுடன் வீசி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

யார் குழந்தையை வீசி சென்றனர் என்பது குறித்து கானை காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து சில மணி நேரங்களே ஆன  பெண் குழந்தையை ஏரிக்கரையில் வீசி விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : குணாநிதி ஆனந்தன் (விழுப்புரம்)

First published:

Tags: Baby, Newborn baby, Rescued Baby, Viluppuram S22p13