ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

மரக்காணம் பகுதியில் பெய்த கனமழையால் 3500 ஏக்கர் உப்பளம் தண்ணீரில் மூழ்கியது..

மரக்காணம் பகுதியில் பெய்த கனமழையால் 3500 ஏக்கர் உப்பளம் தண்ணீரில் மூழ்கியது..

தண்ணீரில் மூழ்கிய உப்பளம்

தண்ணீரில் மூழ்கிய உப்பளம்

Marakkanam | விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக 3500 ஏக்கர் உப்பளம் மழைநீரில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Marakkanam, India

  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் கடற்கரையோரம் ஒட்டியுள்ள பகுதிகளான வண்டிப்பாளையம், முருக்கேரி, பிரம்மதேசம், ஆலத்தூர், அனுமந்தைக்குப்பம், கூனிமேடுக்குப்பம், பொம்மையார்பாளையம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது.  மேலும் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள 3500 ஏக்கர் உப்பளம் மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் 2000-க்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

  மழை நீர் வடியும் வரை உப்பள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ அரசு விரைந்து மழைக்கால நிவாரணம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உப்பள தொழிளாலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  ' isDesktop="true" id="829159" youtubeid="uMqQ7Kvhcjw" category="viluppuram">

  Also see... காதலுக்கு எதிர்ப்பு.. காதலனுடன் விஷம் அருந்தி பள்ளி மாணவி தற்கொலை - ஓசூரில் சோகம்

  மேலும் மரக்காணத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மரக்காணம் பகுதியில் உள்ள 19 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர்: குணாநிதி, விழுப்புரம்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Heavy Rainfall, Salt, Villupuram