ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

ஏலச்சீட்டு நடத்தி 1.5 கோடி பணம் மோசடி செய்த 3 பேர் கைது..!

ஏலச்சீட்டு நடத்தி 1.5 கோடி பணம் மோசடி செய்த 3 பேர் கைது..!

மோசடி செய்த 3 பேர் கைது

மோசடி செய்த 3 பேர் கைது

Viluppuram | விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 1.5 கோடி சீட்டுப்பணம் மோசடியில் ஈடுபட்ட மூவரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Viluppuram, India

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கண்டமநல்லூர் பகுதியை சேர்ந்த மணவாளன்(46) என்பவர் ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். மணவாளனிடம்  கெங்கபுரம், தேவனூர், கள்ளப்புலியூர், சித்தேரி, சமத்துவ குப்பம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் ஏல சீட்டு போட்டு பணம் கட்டி வந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக சீட்டு எடுத்தவர்களுக்கு 1 கோடியே 50 லட்சத்து 55 ஆயிரம் பணம் வழங்காமல் மோசடி செய்து வந்துள்ளார்.

  இது தொடர்பாக கடந்த 6 மாதத்திற்கு முன்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வளத்தி காவல் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த மோசடி தொடர்பாக ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் ஏல சீட்டு நடத்திய மணவாளன், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ஏழுமலை, வரதராஜன் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர்.

  Also see... குமரி பகவதியம்மன் கோயில் திருவிழாவில் பரிவேட்டை நிகழ்ச்சி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

  கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மோசடியில் தொடர்புடைய நான்கு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்   

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Cheating case, Crime News, Viluppuram S22p13