ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

பம்பை ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

பம்பை ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

விழுப்புரம் விபத்து

விழுப்புரம் விபத்து

Viluppuram Death | மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து குளிக்க சென்ற போது நீர் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அருகேயுள்ள பம்பை ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் அருகேயுள்ள அய்யன்கோவில்பட்டு கிராமத்தில் வழியாக செல்லும் பம்பை ஆற்றின் தடுப்பணையில் குளிப்பதற்காக பானம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உதயா(13), பாலசுப்ரமணியன்(16), சங்கர்(14), கிஷோர், பாலா, அஜித் ஆகியோர் சென்றுள்ளனர்.

அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஆறு பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் நான்கு மாணவர்கள் நீந்தி கரையேறிய நிலையில் இருவர் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க | விழுப்புரத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை... படுஜோராக நடைபெறும் கேக் விற்பனை..!

மாணவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரில் மூழ்கிய இருவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் முடியாத காரணத்தினால், அவர்கள் தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற  தீயனைப்புத்துறையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட  உதயா, பாலசுப்பிரமணியனை இருவரையும் படகு உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேர தேடலுக்கு பிறகு உதயா, பாலசுப்பிரமணியன் ஆகியோரின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்.

First published:

Tags: Local News, Villupuram, Viluppuram S22p13