ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

ஒன்றரை வயது குழந்தை உட்பட 2 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. விழுப்புரத்தில் சோகம்!

ஒன்றரை வயது குழந்தை உட்பட 2 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. விழுப்புரத்தில் சோகம்!

தடுப்பு வேலியில் மோதி நிற்கும் வேன்

தடுப்பு வேலியில் மோதி நிற்கும் வேன்

Villuppuram News : விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சாலையோரம் உள்ள தடுப்பு வேலியில் வேன் மோதிய கோர விபத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

புதுச்சேரி மாநிலம் சாரம் பகுதியை சேர்ந்த விக்டர் சுரேஷ்(60) என்பவர் தனது குடும்பத்தினருடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் நிலையில் தனது மனைவியுடன் இன்று வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பினார். இந்நிலையில் தாயகம் திரும்பிய விக்டர் சுரேஷ் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகியோரை அவரது உறவினர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வேன் மூலம் புதுச்சேரிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இவர்களது வேன் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கிளியனூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சென்று சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகள் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய விக்டர் சுரேஷ் மற்றும் அவரது உறவினரின் 1 1/2 வயது குழந்தை விநாளி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 8 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் உயிரிழந்த சுரேஷின் மனைவி தமிழரசி உள்ளிட்ட 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : குணாநிதி - விழுப்புரம்

First published:

Tags: Crime News, Local News, Villupuram