Home /News /vellore /

ஏரியில் மீன்பிடிப்பதில் தகராறு.. இளைஞர் வெட்டிக்கொலை - ஆற்காட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஏரியில் மீன்பிடிப்பதில் தகராறு.. இளைஞர் வெட்டிக்கொலை - ஆற்காட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ராணிப்பேட்டை - தந்தை மகன் கைது

ராணிப்பேட்டை - தந்தை மகன் கைது

Ranipettai | ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்த தந்தை மகனை கைது செய்தனர்.

  • News18
  • Last Updated :
    ஆற்காடு அடுத்த திமிரி பாவேந்தர் நகரை சேர்ந்தவர் குண்டு என்கிற சுப்பிரமணி ( வயது 58 ) . திமிரி அடுத்த விளாரி ஏரியில் மீன் பிடிப்பதற்கான குத்தகை எடுத்துள்ளார். இவருக்கு தெரியாமல் திமிரி ராமப்பாளையம் வேலாயுதபாணி தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் கலையரசன்(21) இவரது தம்பி வசந்த் , தனுஷ், கோபி மற்றும் சிலர் இரவு நேரங்களில் விளாரி ஏரியில் மீன் பிடித்து வந்தததாக கூறப்படுகிறது. இதை சுப்பிரமணி தரப்பினர் தட்டிக்கேட்டதால் கலையரசன் தரப்புக்கும் சுப்பிரமணி தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு திமிரி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .

    இதற்கிடையில் வீட்டில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்ததாக கடந்த 24 ந் தேதி  சுப்பிரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த ஒருமாதமாக இருதரப்புக்கும்  இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றுகாலை கலையரசன், தம்பி வசந்த் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சுப்பிரமணியின் உறவினரான திமிரி ராமபாளையம் தெருவில் உள்ள தினகரன் (45) வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அங்கிருந்த தினகரனின் மகன் அசோக்குமார் (25) , உறவினர்கள் தினேஷ் (24) , சேகர் (60) ஆகியோருக்கும் கலையரசன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது . ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர் . இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார் கலையரசனை கத்தியால் வெட்டியதில் கலையரசன் மயங்கி கிழே விழுந்தார்.

    உடனே அக்கம் ,பக்கத்தினர் மீட்டு திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கலையரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த கலையரசன் தரப்பினர் அசோக்குமார் வீட்டை சூறையாடினர் .

    வெளியே இருந்த காய்கறி கடை மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 5 டூவீலர்களை அடித்து நொறுக்கினர் . மேலும் அங்குள்ள 3க்கும் மேற்பட்ட வீடுகளையும் சூறையாடினர். இதுபற்றி தகவலறிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு , திமிரி இன்ஸ்பெக்டர் லதா, ஆற்காடு தாலுகா இன்ஸ்பெக்டர் காண்டீபன் , ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர்  பார்த்தசாரதி , திமிரி சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் 100 க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    Alslo see...திருமணமான ஒரே மாதத்தில் இறந்துபோன பெண்... காரணம் என்ன?

    இது குறித்து திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு அசோக்குமார், அவரது தந்தை தினகரன் ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

    செய்தியாளர்: க.சிவா, ராணிப்பேட்டை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Murder, Ranipettai

    அடுத்த செய்தி