முகப்பு /செய்தி /வேலூர் / "இதை கருணாநிதியின் நினைவிடத்தில் வையுங்கள்" முதலமைச்சரிடம் பேனா வழங்கிய சிறுமி!

"இதை கருணாநிதியின் நினைவிடத்தில் வையுங்கள்" முதலமைச்சரிடம் பேனா வழங்கிய சிறுமி!

முதலமைச்சரிடம் பேனா வழங்கிய சிறுமி

முதலமைச்சரிடம் பேனா வழங்கிய சிறுமி

Pen gift to CM | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரை வழிமறித்த சிறுமியை நன்றாக படிக்க சொல்லி வாழ்த்திவிட்டு சென்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Vellore | Vellore

வேலூருக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேனாவை பரிசாக வழங்கி இதை கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த சிறுமியின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டங்களை முடித்துக் கொண்டு தமிழக முதலமைச்சர் காரில் வெளியேவந்தார். அப்போது வஞ்சூர் பகுதியை சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் யாழினி என்ற சிறுமி முதலமைச்சரின் காரை வழிமறித்து பேனாவை பரிசாக வழங்கினார்.

மேலும் இந்த பேனாவை கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை என கூறினார். அதற்கு முதலமைச்சர் நிச்சயம் வைக்கிறேன் என கூறிவிட்டு சென்றார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெரினாவில் பேனா நினைவிடம் அமைப்பதற்கு பல்வேறு தரப்பில் வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பி வரும் நிலையில் சிறுமி பேனா வழங்கிய சம்பவம் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.

செய்தியாளர்: செல்வா, வேலூர்.

First published:

Tags: CM MK Stalin, DMK Karunanidhi, Local News, School student, Vellore