Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /வேலூர் /

கொலை செய்ததை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் கெத்துகாட்டிய கொலையாளி.. தட்டித்தூக்கிய போலீஸ்!

கொலை செய்ததை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் கெத்துகாட்டிய கொலையாளி.. தட்டித்தூக்கிய போலீஸ்!

வேலூர் கொலை

வேலூர் கொலை

Vellore murder | கொலை செய்து எடுத்த புகைப்படம் வாட்ஸ் அப்பில் தீயாய் பரவியதால் போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Vellore | Vellore

வேலூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் கொலை செய்ததை புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொண்டதால் போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (50). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனான வெங்கடேசன் (21) டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தற்சமயம் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற வெங்கடேசன் வீடு திரும்பவில்லை. மகனை காணவில்லை என பெற்றோர்கள் ஆங்காங்கே தேடி வந்த நிலையில், வெங்கடேசனின் நண்பர்களுள் வாட்ஸ் அப்பிற்கு ஒரு புகைப்படம் வந்துள்ளது.

அதில் சிலர் வெங்கடேசனை சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசனின் தந்தை சீனிவாசன், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து போலீசார், சந்தேகத்தின் பேரில் 4 பேரை மடக்கி பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் வெங்கடேசன் உட்பட நண்பர்கள் 6 பேர் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

இதையும் படிங்க | ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த இளைஞரை பீர் பாட்டிலால் குத்திக்கொன்ற கொடூரம்.. மதுரையில் அதிர்ச்சி!

அப்பொழுது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வெங்கடேசனின் நண்பர்கள் 5 பேரும் ஒன்றாக சேர்ந்து அவரை கட்டையால் சரமாரியாக தாக்கியும் வெட்டியும் கொலை செய்து அதனை புகைப்படங்களாக எடுத்து நண்பர்களுக்கிடையே பகிர்ந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து சடலத்தை அங்கேயே புதைத்து விட்டு எதுவும் தெரியாதது போல் உலாவி வந்துள்ளனர்.

இந்த புகைப்படம் தீயாய் பரவ சீனிவாசன் கண்களின் சிக்கியதால் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை தொடர்ந்து போலீசார், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலையில் புதைக்கப்பட்டிருந்த உடலை மீட்டு பிணக்கூர்வு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்த 5 பேரில் 4 பேரை கைது செய்து, மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: செல்வம், வேலூர்.

First published:

Tags: Crime News, Local News, Murder, Vellore