ஹோம் /நியூஸ் /வேலூர் /

போதையில் சில்மிஷம் செய்தவரை செருப்பால் அடித்த பெண்.. வேலூரில் அதிர்ச்சி!

போதையில் சில்மிஷம் செய்தவரை செருப்பால் அடித்த பெண்.. வேலூரில் அதிர்ச்சி!

பாலியல் தொல்லை அளித்தவருக்கு செருப்படி கொடுத்த பெண்

பாலியல் தொல்லை அளித்தவருக்கு செருப்படி கொடுத்த பெண்

Abuse case | தொடர்ந்து இந்த வனப்பூங்காவில் சமூக விரோதிகள் இது போன்ற செயல்களின் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Vellore | Vellore

வேலூரில், குடிபோதையில்  தவறாக நடக்க முயற்சி செய்த  வாலிபரை செருப்பால் அடித்த பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது.

வேலூர் அமிர்தி பகுதியில் வன உயிரினப் பூங்கா அமைந்துள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்வது வழக்கம். இந்த பகுதியில், சில இளைஞர்கள் மது அருந்திவிட்டு, கஞ்சா போதையில் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்வதும் செயின் பறிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் சம்பவமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதேபோல் நேற்று அமிர்திக்கு வந்த தம்பதி ஒருவரிடம் குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை இழுத்து தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். பெண் அலறிய சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்தவர் ஓடி வந்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

பொதுமக்கள் வந்தவுடன் அந்தப் பெண் அந்த இளைஞரை என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்வாயா என அழுது கொண்டே செருப்பால் அடித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க | மனைவியை 50 துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே வீசிய கணவன்.. டெல்லியை மிஞ்சிய ஷாக் சம்பவம்!

இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஆனால் இதுவரை போலீசார் எந்த வழக்கும் பதியவில்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், சமூக விரோதிகளுக்கு பயந்து பொதுமக்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை என்றும், போலீசார் இப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர்: செல்வம், வேலூர்.

First published:

Tags: Crime News, Local News, Sexual abuse, Vellore