முகப்பு /செய்தி /வேலூர் / பள்ளிக்கு புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த மாணவர்கள்.. சொந்த செலவில் முடிதிருத்தம் செய்த தலைமை ஆசிரியர்!

பள்ளிக்கு புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த மாணவர்கள்.. சொந்த செலவில் முடிதிருத்தம் செய்த தலைமை ஆசிரியர்!

மாணவர்களின் முடிதிருத்திய தலைமை ஆசிரியர்

மாணவர்களின் முடிதிருத்திய தலைமை ஆசிரியர்

Vellore school students | பள்ளிக்கு ஒழுங்காக முடி திருத்தம் செய்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டும் மாணவர்கள் கேட்காததால் தலைமை ஆசிரியர் நடவடிக்கை மேற்கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Vellore | Vellore

வேலூரில் பள்ளிக்கு புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வெட்டி வந்த 75 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் முடி திருத்தம் செய்தார்.

வேலூர்மாவட்டம் அண்ணாசாலையில் ஊரீசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் சிலர் லைன் கட்டிங், டாப் கட்டிங் போன்ற பல்வேறு முறைகளில் சரியான முறையில் தலைமுடியை வெட்டாமல் ஸ்டைலாக வந்துள்ளனர்.

இதனால் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களை அழைத்து தலைமுடியை ஒழுக்கமாக வெட்டி வர வேண்டும் என்று பல நாட்களாக அறிவுறுத்தி வந்தது. இதை மாணவர்கள் கண்டுகொள்ளவில்லை. அந்த வகையில் வழக்கம் போல், இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களில் ஒழுங்கற்ற முறையில் முடி வைத்திருந்த மாணவர்களை தலைமை ஆசிரியர் எபினேசர் தனியாக அழைத்தார்.

தொடர்ந்து அந்த 75 மாணவர்களுக்கும், 2 முடி திருத்தும் தொழிலாளர்கள் மூலம் பள்ளி வளாகத்திலேயே தலைமுடியை திருத்தம் செய்ய ஏற்பாடு செய்தார். அதையடுத்து, பள்ளி வளாகத்திலேயே 75 மாணவர்களுக்கும் சீரான முறையில் முடித்திருத்தம் செய்யப்பட்டது.

செய்தியாளர்: செல்வம், வேலூர்.

First published:

Tags: Hairstyle, Local News, School student, Vellore