Home /News /vellore /

வேலூரில் பைக்குக்கும் சேர்த்து போடப்பட்ட ரோடு: மீண்டும் ஒரே நாள் இரவில் அகற்றம்- பொதுமக்கள் மீண்டும் ஷாக்

வேலூரில் பைக்குக்கும் சேர்த்து போடப்பட்ட ரோடு: மீண்டும் ஒரே நாள் இரவில் அகற்றம்- பொதுமக்கள் மீண்டும் ஷாக்

வேலூர் சாலை

வேலூர் சாலை

வேலூரில் இரவோடு இரவாக இருசக்கர வாகனத்தின் மீது போடப்பட்ட சாலை மறுநாள் இரவில் அகற்றப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சி சீர்மிகு நகராக (ஸ்மார்ட் சிட்டி) தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வேலூர் மெயின் பஜார் தெருவில் நேற்றைய முன்தினம் நள்ளிரவில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை வேலூர் மக்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

காளிகாம்பாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவா. இவரது இருசக்கர வாகனத்தை நேற்றைய முன்தினம் இரவு வழக்கம் போல் தங்களது கடைமுன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

காலை எழுந்து வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது. அத்தோடு சேர்ந்து தெருவோரம் நிற்க வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் வாகனத்தை எடுக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் சிமெண்ட் கலவை இருகிவிட்டதால் எடுக்கமுடியவில்லை. பின்னர் போராடி உடைத்து வண்டியை மீட்டுள்ளனர். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாக சாலை போட்டுள்ளனர். அப்போது வண்டிக்கும் சேர்த்தே சாலை போட்டுள்ளனர்.

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பி.எஸ்: இரட்டைத் தலைமைதான் நல்லது- எம்.ஜி.ஆர் பேரன்

இதுகுறித்த செய்தி வெளியானதை அடுத்து நேற்றைய முன் தினம் இரவில் போடப்பட்ட சாலையானது நேற்று இரவிலேயே முழுவதுமாக பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட பகுதி பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் உறங்கி எழுந்தவுடன் ஒவ்வொரு அதிர்ச்சியும் தங்களுக்கு காத்துக் கொண்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

செய்தியாளர்: செல்வம், வேலூர்.
Published by:Karthick S
First published:

Tags: Vellore

அடுத்த செய்தி