முகப்பு /செய்தி /வேலூர் / வேலூர் சிஎம்சியில் ஜூனியர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங்.. வெளியான வீடியோவால் அதிர்ச்சி.. 7 பேர் சஸ்பெண்ட்..

வேலூர் சிஎம்சியில் ஜூனியர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங்.. வெளியான வீடியோவால் அதிர்ச்சி.. 7 பேர் சஸ்பெண்ட்..

ராகிங்

ராகிங்

ராகிங்-க்கு காரணமானவர்கள் மீதும்,  விடுதி வார்டன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Vellore, India

வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ஜூனியர்களை ஆடையை கழற்றி ராகிங் செய்த வீடியோ வெளியானதை அடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள்  சீனியர் மாணவர்களால் ராகிங் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் ராகிங் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் சீனியர் மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவர்களை உள்ளாடையுடன் விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்துள்ளனர். மேலும் இரு மாணவர்களை அரை நிர்வாணமாக கட்டிப்பிடிக்க வைத்து அவர்கள் மீது தண்ணீரும் பீய்ச்சி அடிக்கின்றனர். அது மட்டுமின்றி அவர்கள் அந்தரங்க பகுதிகள் தாக்குயுள்ளனர். இது போன்று மாணவர்கள், உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையானது.

இதனையடுத்து முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு ராகிங் செய்த 7 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கல்லூரியின் முதல்வர் டாக்டர் சலாமன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கல்லூரியில் உள்ள ராகிங் தடுப்பு கமிட்டிக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை பெயர் குறிப்பிடப்படாத கடிதம் கிடைத்தது என தெரிவித்தார்.

வீட்டுக்கு வந்தா சீரியல் வாய்ப்பு.. இளம்பெண்ணை வன்கொடுமை செய்ய முயன்ற கேமராமேன்! (news18.com)

அந்தக் கடித்ததில், ''மாணவர்கள் தங்கும் விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆடைகளை களைந்து விடுதி வளாகத்தை நடந்து சுற்றி வர வைத்தனர்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் சமூக வலைதளங்களிலும் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் விடுதியில் கடந்த 9ஆம் தேதி நடந்ததாகவும், இதற்கு காரணமானவர்கள் மீதும்,  விடுதி வார்டன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக டெல்லியில் இருக்கும் ராகிங் தடுப்புப் பிரிவுக்கு புகார் வந்து இருப்பதாக தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் கல்லூரியின் விரிவான அறிகைக்கைக்கு காத்திருப்பதாக தெரிவித்தது.

- செல்வம், செய்தியாளர், வேலூர் மாவட்டம்  

First published:

Tags: Medical Students, Vellore