ஹோம் /நியூஸ் /வேலூர் /

தீபத் திருவிழா முன்னிட்டு திருவண்ணாமலையில் கால்நடை சந்தை.. வேலூர் விவசாயிகளே கவனிக்க..

தீபத் திருவிழா முன்னிட்டு திருவண்ணாமலையில் கால்நடை சந்தை.. வேலூர் விவசாயிகளே கவனிக்க..

கால்நடை சந்தை

கால்நடை சந்தை

திருவண்ணாமலையில் 2022 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு 02.12.2022 முதல் 06.12.2022 வரை கால்நடை சந்தைகள் நடைபெற இருக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Vellore, India

  திருவண்ணாமலை கால்நடை சந்தைக்கு வேலூரில் இருந்து கால்நடைகளை அழைத்துச் செல்ல பதிவு செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

  திருவண்ணாமலை கால்நடை சந்தை பதிவு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில், 2022 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு 02.12.2022 முதல் 06.12.2022 வரை கால்நடை சந்தைகள் நடைபெற உள்ளது.  கால்நடைகளை அழைத்துச் செல்ல விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி, கைபேசி எண், ஆதார் எண், மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது

  வேலூரில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில்  மண்டல இணை இயக்குநரின் பதிவு மற்றும் அனுமதி பெற்று கால்நடைகளை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  இதையும் படிக்க : வேலூரில் நடமாடும் ஆட்டோ  நூலகங்களை துவக்கி வைத்த சிறைத்துறை டிஐஜி

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி உரிய பதிவு மற்றும் அனுமதி பெறாமல் கால்நடை சந்தைக்கு அழைத்துச் செல்லப்படும் கால்நடைகள் திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Agriculture, Deepam festival, Karthigai Deepam, Thiruvannamalai, Vellore, Vellore district