ஹோம் /நியூஸ் /வேலூர் /

வேலூரில் வீடு புகுந்து திருடும் கொள்ளையன் கைது..

வேலூரில் வீடு புகுந்து திருடும் கொள்ளையன் கைது..

கைது

கைது

Vellore | வேலூரில் வீடு புகுந்து திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 சவரன் தங்க நகைகளை மீட்டு அவரை சிறையில் அடைத்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Vellore, India

  வேலூர் மக்கான் பகுதியில் வசிப்பவர் சையத் ரசூல். இவர் கடந்த மாதம் 29ஆம் தேதி  திருவண்ணாமலையில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன்சென்றுள்ளார். மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்த பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

  அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

  அதன் அடிப்படையில் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த ராகுல் ராபர்ட் (22) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

  ' isDesktop="true" id="829169" youtubeid="4UNBRJy8QF0" category="vellore">

  Also see... மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷமருந்தி தற்கொலை

  ராகுல் ராபர்ட் இடம்  இருந்து 10 சவரன் தங்க நகைகளை மீட்ட காவல்துறையினர், இதற்கு முன் கொள்ளையடித்த தங்க நகைகளின் விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: செல்வம்,வேலூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, Thief, Vellore