Home /News /vellore /

சாலைவசதி இல்லாததால் பாதி வழியில் பிரசவம்.. தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த பரிதாபம்

சாலைவசதி இல்லாததால் பாதி வழியில் பிரசவம்.. தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த பரிதாபம்

சாலை வசதி இல்லாததால் தாய்-சேய் பலி

சாலை வசதி இல்லாததால் தாய்-சேய் பலி

Vellore : வேலூரில் உள்ள மலை கிராமத்தில், சாலை வசதி இல்லாததால் பாதி வழியிலேயே பிரசவம் ஏற்பட்டதால் தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் மாவட்ட மலை கிராமத்தில், சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து வரப்பட்ட கர்ப்பிணி பெணுக்கு பாதி வழியில் பிரசவம் ஏற்பட்டதால் அந்த பெண் மற்றும் குழந்தை ஆகியோர் பரிதாபமாக பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, ஒடுகத்தூரை அடுத்த பீஞ்ச மந்தை சின்ன எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்  குள்ளையன் (வயது 28) இவரது மனைவி காஞ்சனா வயது (22). கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது.காஞ்சனா நிறை மாத கர்பிணியாக இருந்தார். அவர், எலந்தம்புதூர் மலை கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார். அவருக்கு  அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.

    கணவர் வெளியூருக்கு கூலி வேலைக்கு சென்று இருந்தால் அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஒரு மாதத்திற்கு முன்பே ஆம்புலன்ஸ் பழுதானதாக கூறப்படுகிறது, ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் உறவினர்கள் பிரசவ வலியால் துடித்த காஞ்சனாவை பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அந்தப் பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் அவசரமாக செல்ல முடியவில்லை. இதனால் வழியிலேயே, காஞ்சனா துடியாகத் துடித்தார். அதனைத் தொடர்ந்து, வழியிலேயே அவருக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில், பிறந்தது. பின்னர்  காஞ்சனாவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. பின்னர், அவரும் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார மருத்துவ அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார், இறந்த காஞ்சனா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்தனர். ஆனால் அப்பகுதி பொதுமக்கள் அவரது உடலை தர மறுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் தாசில்தார் நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது காஞ்சனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில்,  சாலை வசதி இருந்திருந்தால் அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருப்போம். அவரும் இப்போது உயிருடன் இருந்திருப்பார் என்று ஆதங்கம் தெரிவித்தனர். அத்துடன், உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    Must Read : கள்ளக்குறிச்சி பள்ளியில் களவாடிச் சென்ற பொருட்களை திருப்பி தாருங்கள்.. கிராமம் கிராமமாக தண்டோரா போடும் அதிகாரிகள்

    இந்நிலையில், பீஞ்சமந்தை மலைப்பகுதியில் விரைவில்  சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து காஞ்சனாவின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மலைப்பகுதியில் முறையான சாலை இல்லாததால் தாயும் குழந்தையும் பலியான சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - செல்வம், வேலூர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Death, Lack of road facility, Pregnant, Vellore

    அடுத்த செய்தி