Home /News /vellore /

ரூ1 கோடி கேட்டு கடத்தப்பட்ட தனியார் நிதி நிறுவன ஏஜெண்ட் - ஆந்திராவில் மீட்ட போலீஸ்

ரூ1 கோடி கேட்டு கடத்தப்பட்ட தனியார் நிதி நிறுவன ஏஜெண்ட் - ஆந்திராவில் மீட்ட போலீஸ்

(FILE PIC )

(FILE PIC )

ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திருப்பி கேட்டு பணத்திற்காக கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Vellore, India
குடியாத்தம் அருகே பணத்திற்காக கடத்திய நபரை ஆந்திர மாநிலத்தில் காவல்துறையினர் மீட்டு இருவரை கைது செய்துள்ள நிலையில் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி தாசிராப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன்  (47) என்பவர் இவர் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் அக்கவுண்டராகவும் மற்றும் பரதராமி பகுதியில் ஏஜென்ட் ஆகவும் பணியாற்றி வந்துள்ளார். பரதராமி  பகுதியில் பல பேரிடம் தாமோதரன் பணிபுரியும்  டிரேடிங் கம்பெனியில் பணத்தை முதலீடு செய்ய வைத்துள்ளார். இந்த நிலையில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத் தரும்படி முதலீடு செய்தவர்கள் தாமோதரனிடம் கேட்டுள்ளனர்.

Also Read : 4308 காலி மருத்துவ பணியிடங்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

இந்த நிலையில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீது  கூட்டுச்சதி உட்பட ஆறு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாமோதரனிடம் பணத்தை முதலீடு செய்தவர் பணம் கேட்டுள்ளனர். இவர் இதற்கு எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பணம் முதலீடு செய்த பரதராமி பகுதியை சேர்ந்த மூன்று பேர்  சேர்ந்த கும்பல் கடந்த 12ஆம் தேதி தாமோதரனை கடத்தி உள்ளனர்.

இதனையடுத்து தாமோதரன் மனைவி மகாலட்சுமி பரதராமி காவல் நிலையத்தில் கணவர் காணவில்லை என புகார் அளித்தனர். தாமோதரன் மனைவிக்கு கடத்தப்பட்ட நபர்கள் போன் செய்து ஒரு கோடி ரூபாய் தரும்படி மிரட்டி உள்ளனர்.தாமோதரன் மனைவி என்னிடம் 10 லட்சம் மட்டுமே இருக்கிறது அதை வேண்டும் என்றால் தருகிறேன் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன் மற்றும் சிலம்பரசன் மற்றும் போலீசார் ஆந்திர மாநிலம் நெல்லுபட்லா என்ற இடத்தில் தாமோதரனை மீட்டுள்ளனர்.

தாமோதரனை கடத்தியவ் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் ராஜ்குமார் இருவரையும் கைது செய்த நிலையில் தப்பியோடிய ரமேஷ் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் தமோதரனை கடத்தி தப்பியோடிய ரமேஷ் கடத்தப்பட்ட தாமோதரனின் சின்ன மாமனாரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Ramprasath H
First published:

Tags: Vellore

அடுத்த செய்தி