ஹோம் /நியூஸ் /வேலூர் /

திமுக அரசு வெளிப்படையாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது - கே.எஸ்.அழகிரி பாராட்டு

திமுக அரசு வெளிப்படையாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது - கே.எஸ்.அழகிரி பாராட்டு

செய்தியாளர்கள் சந்திப்பில் கே.எஸ்.அழகிரி

செய்தியாளர்கள் சந்திப்பில் கே.எஸ்.அழகிரி

Congress Leader KS Alagiri Press Meet | ஒரு வெளிப்படையான அரசாங்கத்தை மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி வருவதாக கே.எஸ்.அழகிரி பாராட்டி உள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Vellore, India

திமுக ஆட்சி கொள்கை ரீதியாகவும் மோடி அரசுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சட்டமன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டு வந்ததை காங்கிரஸ் கட்சி வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்ததில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை நினைவு கூறும் வகையில் வேலூர் மாவட்டம் முழுவதும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கல்வெட்டுகள் மற்றும் கட்சி கொடி ஏற்றி வைத்து வருகிறார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதாக கூறினார்.

தேர்தல் கால வாக்குறுதிகளை முடிந்த வரை நிறைவேற்றி வருவதாகவும் ஒரு வெளிப்படையான அரசாங்கத்தை மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி வருவதாகவும்  குறிப்பாக ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோலின் விலை மூன்று ரூபாய் குறைத்துள்ளதாகவும் பல்வேறு வகையில் சீர்திருத்தங்களை செய்து வருவதாக அழகிரி பாராட்டினார்.

சென்னையில் கடந்த ஆண்டு மழை நீர் தேங்கியிருந்த இடத்தில் இந்த ஆண்டு மழை நீர் தேங்காத வகையில் களப்பணிகளை திமுக ஆட்சி செய்துள்ளதாகவும்  டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாகவும் , வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று சட்டமன்றதில் தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வந்தார் என்றார். திமுக அரசு கொள்கை ரீதியான தீர்மானத்தைக் கொண்டு வந்ததற்காக தமிழக காங்கிரஸ்  வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கூறினார்.

செய்தியாளர் : செல்வம், வேலூர்

First published:

Tags: CM MK Stalin, KS Alagiri, Vellore