களஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று களஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இதன்படி, வேலூர், சத்துவாச்சாரியை அடுத்த பாரதி நகரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் ஆரம்ப சுகாதார மையப் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் எதிரே கட்டப்பட்டு வரும் நியாய விலைக்கடை கட்டுமானத்தை பார்வையிட்ட அவர், மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
காலை சிற்றுண்டி திட்டத்திற்காக உணவு தயாரிக்கப்படும் கூடத்தில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அங்கு உணவை ருசி பார்த்து ஆலோசனை வழங்கியவர், அலமேல் மங்காபுரம் பகுதியில் உள்ள ஆதி திராவிடர் ஆரம்ப பள்ளிக்குச் சென்று, மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.
இதனைத் தொடர்ந்து, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத்திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, காந்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், 4 மாவட்ட ஆட்சியர்களும் கலந்துகொண்டு மாவட்டங்களில் பின்பற்றப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Ranipettai, Thirupathur, Thiruvannamalai, Vellore