ஹோம் /நியூஸ் /வேலூர் /

ஒரே அறையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்... கண்டுகொள்ளாத குடியாத்தம் மாவட்ட நிர்வாகம்...

ஒரே அறையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்... கண்டுகொள்ளாத குடியாத்தம் மாவட்ட நிர்வாகம்...

வேலூர் மாவட்டம் - அரசு பள்ளி

வேலூர் மாவட்டம் - அரசு பள்ளி

ஒரே அறையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை ஆக்கிரமிப்பு செய்து பலர் குடியிருந்து வருகின்றனர். இதனை  மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Vellore, India

வேலூர் மாவட்டம்  குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர் மாணவிகள் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். கட்டிட வசதியின்றி பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒரே வகுப்பறையில்  பயின்று வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது  செட்டிகுப்பம் கிராமத்தை ஒட்டி இப்பள்ளிக்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது வரை அந்த பள்ளி கட்டிடம் திறக்கப்படவில்லை. அதனால் தற்போது அந்த  கட்டிடத்தில் சில நபர்கள் குடியேறி குடும்பம் நடத்தி வருகின்றனர். இதுவரை கல்வித்துறையோ மாவட்ட நிர்வாகமோ இதனை கண்டு கொள்ளவில்லை. இது குறித்து எந்த கேள்வியும் கேட்கவில்லை.

இதன் காரணமாக இப்பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகள் அங்கிருந்து டீசி வாங்கிக் கொண்டு மாற்றுப் பள்ளியில் சேர்வது அதிகரித்துத்துள்ளது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் பள்ளியை இழுத்து மூட வேண்டிய நிலைமை ஏற்படும். மேலும் அப்பகுதியில் உள்ள ஏழை மாணவர்கள் வெளியூருக்கு சென்று படிக்க முடியாமல் படிப்பை கைவிட்டு விட்டு வேறு வேலைகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது..

Also see... உணவுப் பொருட்கள் மீதான ஜி எஸ் டி வரிக்கு விக்ரம ராஜா எதிர்ப்பு...

உடனடியாக தமிழக அரசு பிரச்சனையை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: கோபி, வேலூர்-குடியாத்தம்

First published:

Tags: Government school, Vellore