முகப்பு /செய்தி /வேலூர் / மரம் அறுக்கும் இயந்திரம் விழுந்ததில் கால்துண்டாகி தொழிலாளி பலி..

மரம் அறுக்கும் இயந்திரம் விழுந்ததில் கால்துண்டாகி தொழிலாளி பலி..

தொழிலாளி மரணம்

தொழிலாளி மரணம்

Vellore | குடியாத்தம் அருகே, மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி இறந்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Gudiyatham, India

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ராமாலை அடுத்த ஜே ஜே நகர் பகுதியில் வரதராஜன் ( வயது 65 ). இவர் தனது மனைவி முனியம்மாளுடன் வசித்து வந்தார். இவர் நெசவு வேலை செய்யும் தொழிலாளி. இதனிடையே அவ்வபோது மர வேளையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் கட்டில் செய்வதற்காக மரம் அறுக்கும் சிறிய இயந்திரத்தின் மூலம் மரத்தை அறுத்துக் கொண்டு இருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக இயந்திரம் அவர் கால் மீது விழுந்ததில் அவரது கால் முழுமையாக துண்டாகியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மனைவி முனியம்மாவும் அந்த இயந்திரத்தின் மூலம் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் கால் துண்டான வரதராஜன் அதிக ரத்தம் வெளியேறியதன் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Also see... வெஜ் சூப்பில் மிதந்து வந்த 'ஈ'... ஷாக்கான மருத்துவர்..

மேலும் அவரது உடலை மீட்டு உடல் கூறுவாயுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுங்காயம் அடைந்த முனியம்மா சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து பரதராமி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்- கோபி, வேலூர்

First published:

Tags: Accident, Dead, Vellore