முகப்பு /செய்தி /வேலூர் / ஏடிஎம் கார்டில் பணம் செலுத்த வந்தவரிடம் நூதன கொள்ளை... சிசிடிவியில் சிக்கிய காட்சி

ஏடிஎம் கார்டில் பணம் செலுத்த வந்தவரிடம் நூதன கொள்ளை... சிசிடிவியில் சிக்கிய காட்சி

ஏ.டி.எம்.மில் பணம் செலுத்த வந்தவரிடம் நூதன கொள்ளை

ஏ.டி.எம்.மில் பணம் செலுத்த வந்தவரிடம் நூதன கொள்ளை

குடியாத்தம் காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர்களிடம் ஏடிஎம் கார்டு கொடுத்து பணம் செலுத்துவதோ பணம் எடுப்பதோ தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Vellore, India

வங்கி ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த பெயிண்டரிடம் நூதன முறையில் ரு,40,000 பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாசம்(47) என்பவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 28-ம் தேதி குடியாத்தம் இந்தியன் வங்கியில் ஏடிஎம் மூலம் பணம் செலுத்துவதற்காக வந்துள்ளார். ஏடிஎம் மூலம் பணம் செலுத்திக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் அறைக்குள் வந்து அவருக்கு உதவி செய்வது போல்  நடித்து அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டை மாற்றி வேறு போலி ஏடிஎம் கார்டு கொடுத்துள்ளார்.

பின்னர் பெயிண்டர்  பிரகாசம் என்பவருடைய வங்கி கணக்கில் இருந்து 10,000 ரூபாய் என நான்கு முறை அவர் வங்கி கணக்கிலிருந்து ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது.

ALSO READ |  சீசன் முடிந்தும் குற்றாலத்தில் கூடும் கூட்டம்.. அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்!

 அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரகாசம் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குடியாத்தம் போலீசார் இந்தியன் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் பிரகாசம் என்பவருடைய ஏடிஎம் கார்டை மாற்றி போலி ஏடிஎம் கார்டு கொடுத்தது தெரிய வந்தது.

பின்னர் வழக்கு பதிவு செய்து குடியாத்தம் போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான மர்ம நபரை தேடி வருகின்றனர். குடியாத்தம் காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர்களிடம் ஏடிஎம் கார்டு கொடுத்து பணம் செலுத்துவதோ பணம் எடுப்பதோ தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

குடியாத்தம் செய்தியாளர்: கோபி

First published:

Tags: ATM, CCTV, Robbery