ஹோம் /நியூஸ் /வேலூர் /

செஸ் ஒலிம்பியாட் : பிரதமர் மோடி வருகையை எதிர்த்து ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸார்

செஸ் ஒலிம்பியாட் : பிரதமர் மோடி வருகையை எதிர்த்து ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸார்

ராணிபேட்டை- ரயில் மறியல்

ராணிபேட்டை- ரயில் மறியல்

சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அரக்கோணம் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 20 நிமிடங்கள் ரயில் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Vellore, India

தமிழகத்தில் துவங்கியுள்ள 44வது செஸ் ஒலிம்பிக் போட்டிக்கு  பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதை ஒட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காங்கிரஸ் ஜவஹர் பால் மஞ்ச், மாநிலத் தலைவர் நரேஷ் குமார் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்லும அதிவிரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also see... கோவையில் 6வது புத்தக கண்காட்சி: மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்பு

அப்போது மோடி ஒழிக கோ பேக் மோடி என்ற கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட காங்கிரஸாரை காவல்துறை அப்புறப்படுத்தும் போது காவல்துறைக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரையும் காவல்துறை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக 20 நிமிட நேரம் அதிவிரைவு ரயில் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்: க.சிவா, ராணிப்பேட்டை 

First published:

Tags: BJP, Chess Olympiad 2022, Ranipettai, Vellore