ஹோம் /நியூஸ் /வேலூர் /

வேலூரில் நடமாடும் ஆட்டோ  நூலகங்களை துவக்கி வைத்த சிறைத்துறை டிஐஜி

வேலூரில் நடமாடும் ஆட்டோ  நூலகங்களை துவக்கி வைத்த சிறைத்துறை டிஐஜி

சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன்

சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன்

Vellore | தற்போது இங்கு துவங்கப்பட்ட திட்டம் தமிழக முழுவதும் பரவி நாற்பதாயிரம் ஆட்டோக்களுக்கு மேல் நடமாடும் நூலகங்களாக ஆட்டோக்கள் மாற வேண்டும் என  பேசினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Vellore, India

வேலூரில் நடமாடும் ஆட்டோ நூலகங்களை சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக் கண்ணன் துவக்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஆக்சிலியம் கல்லூரியில் நாட்டு நல திட்ட பணிகள் மூலம் நடமாடும் ஆட்டோ நூலகங்களை இன்று சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் துவக்கி வைத்தார்.

பின்பு அவர் பேசுகையில் "மரங்களை மண்ணில் விதைப்பது போல் மனங்களில் நல்ல எண்ணங்களை புத்தகங்கள் மூலம் விதைக்கலாம்" போக்குவரத்தில் அதிகமாக மக்கள் பயணம் செய்வது ஆட்டோ களில்தான். அப்படி பயணம் செய்யும்போது அவர்கள் இந்த புத்தகங்களை படிப்பதன் மூலம் மக்களிடையே சிறு மாற்றத்தை ஏற்படுத்தினால் கூட சமுதாயத்திற்கு அது நலமாக அமையும்.

தற்போது இங்கு துவங்கப்பட்ட திட்டம் தமிழக முழுவதும் பரவி நாற்பதாயிரம் ஆட்டோக்களுக்கு மேல் நடமாடும் நூலகங்களாக ஆட்டோக்கள் மாற வேண்டும் என  பேசினார்.

Read More: குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்.. வீடியோ எடுத்தால் ரூ.200 பரிசு - வேலூர் மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜெயசாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்  - செல்வம்

First published:

Tags: Auto, Vellore