முகப்பு /செய்தி /வேலூர் / குடியாத்தம் மஞ்சு விரட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த 400க்கும் மேற்பட்ட காளைகள்

குடியாத்தம் மஞ்சு விரட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த 400க்கும் மேற்பட்ட காளைகள்

 குடியாத்தம் அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டி

குடியாத்தம் அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டி

Gudiyatham Bull-riding competition | எருதுவிடும் திருவிழாவை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பாட்டு இருந்தது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Vellore, India

குடியாத்தம் அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் எங்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடும் திருவிழா களைகட்டி வருகிறது.வடமாவட்டங்களில் புகழ்பெற்ற எருது விடும் திருவிழா எனும் மஞ்சு விரட்டு குடியாத்தம் அடுத்த  வீ.மத்தூர் கிராமத்தில் 108 ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா இன்று நடைபெற்றது.

முன்னதாக இக்கிராமத்தில் எருதுவிடும் சாலைகளில் மண் கொட்டி மண் சாலையாக வடிவமைக்கப்பட்டது அரசு விதிகள் படி  போட்டியில்  கலந்துகொள்ளும் அனைத்து காளை மாடுகளுக்கும் கால்நடை மருத்துவர் குழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது.

ஒரு எருது இரண்டு சுற்றுகள் விடப்பட்டது. இதில் அதிவேகமாக ஓடும் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முதல் பரிசாக  ரூ.50,000 இரண்டாவது பரிசு ரூ.40,000 மூன்றாவது பரிசு ரூ.30,000 மொத்தம் 40 பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எருது விடும் திருவிழாவில்  400 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது. காளைகள் உரிமையாளர்,  இளைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். எருதுவிடும் திருவிழாவை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்தியாளர் :  வெங்கடேசன்

First published:

Tags: Local News, Vellore