முகப்பு /செய்தி /வேலூர் / வேலூரில் கோவிலுக்கு வெளியே நின்றிருந்த வாகனம் திருட்டு... சிசிடிவியில் சிக்கிய திருடன்..!

வேலூரில் கோவிலுக்கு வெளியே நின்றிருந்த வாகனம் திருட்டு... சிசிடிவியில் சிக்கிய திருடன்..!

பதிவான சிசிடிவி காட்சி

பதிவான சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சியில் வாகனத்தை திருடுபவர் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல வாகனங்களை திருடியுள்ளது தெரிய வந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Vellore, India

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த புதூர் பகுதியை சேர்ந்த சமையல் மாஸ்டர் ஞானம் (39). இவர் மனைவி மற்றும் குழந்தையுடன் விருப்பாட்சிபுரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு கடந்த 4 ஆம் தேதி வந்துள்ளார்.  கோயிலுக்கு வெளியே தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே  சென்றபோது, அங்கே இவரது வாகனத்தை நோட்டமிட்ட வாலிபர் ஒருவர்  வாகனத்தை திருடி சென்றுள்ளார்.

இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்தில் ஞானம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாகன திருடனை தேடி வருகின்றனர். சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சியில் வாகனத்தை திருடுபவர் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல வாகனங்களை திருடியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சி மூலம் போலீசார் வாகன திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Bike Theft, CCTV, Crime News, Local News, Vellore