Home /News /vellore /

புலிக்குட்டி விற்பனைக்கு என விளம்பரம்.. வேலூரில் இளைஞர் கைது

புலிக்குட்டி விற்பனைக்கு என விளம்பரம்.. வேலூரில் இளைஞர் கைது

புலிக் குட்டி விறபனைக்கு என்று பதிவிட்டவர் கைது

புலிக் குட்டி விறபனைக்கு என்று பதிவிட்டவர் கைது

Vellore | மூன்று மாத புலிக்குட்டி 25 லட்ச ரூபாய்க்கு கிடைக்கும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Vellore, India
    சமூக வலைதள பக்கத்தில் பார்த்திபன் என்பவர் மூன்று மாத புலிக்குட்டி விற்பனைக்கு உள்ளதாகவும், அது 25 லட்ச ரூபாய் விலை எனவும் ஆன்லைனில் முன்பதிவு செய்தால் 10 நாட்களுக்குள் புலிக்குட்டி டெலிவரி செய்யப்படும் என்று புலிக்குட்டி படத்துடன் பதிவு செய்திருந்தார்.

    இதுகுறித்து சென்னையில் இருந்து வேலூர் வனத்துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வேலூர் பகுதியில் பார்த்திபன் தங்கியுள்ளதாக தெரியவந்ததை அடுத்து அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

    இவர் ஆரணி பகுதியை சேர்ந்தவர் என்பதும் வேலூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது விசாரணைக்கு பின்பு பார்த்திபன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Also see... அதிக வட்டி கொடுப்பதாக ரூ.60 லட்சம் மோசடி...

    இவருடன் வேறு யாராவது தொடர்பில் உள்ளார்களா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் - செல்வம், வேலூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Social media, Tiger, Vellore

    அடுத்த செய்தி