Home /News /vellore /

கயிறு கட்டக்கூடாது.. கம்மல், காப்புக்கு தடை.. பிறந்தநாள் அன்றும் சீருடை- மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு

கயிறு கட்டக்கூடாது.. கம்மல், காப்புக்கு தடை.. பிறந்தநாள் அன்றும் சீருடை- மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு

கயிறு கட்டக்கூடாது

கயிறு கட்டக்கூடாது

Vellore : வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் காப்பு, கம்மல், செயின், கயிறு உள்ளிட்டவை அணிய கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்ட பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நன்னெறிப் பண்புகள் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், மாணவ மாணவியர் தலையில் எண்ணெய் வைத்து தலைவார வேண்டும், பிறந்த நாள் என்றாலும் மாணவ மாணவியர்கள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும், பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று தான் விடுப்பு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவ மாணவியர்கள் இருசக்கர வாகனம், மொபைல் போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு வர அனுமதி இல்லை, எந்தவொரு டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது காப்பு, கம்மல், செயின், கயிறு போன்ற ஆபரணங்கள் ஏதும் அணியக் கூடாது என்றும், ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவ மாணவியர்கள் வகுப்பறையை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : எது தாழ்ந்த சாதி? - சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் இடம் பெற்றுள்ள கேள்வியால் சர்ச்சை

    மேலும், மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க கதைகளை எடுத்துரைக்க வேண்டும் என்றும், மாதந் தோறும் ஒரு தலைப்பின் கீழ் மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: School students, Vellore

    அடுத்த செய்தி