Home /News /vellore /

வேலூரில் முடி வெட்டிக் கொண்டு பணம் இல்லை என கூறிய இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை...

வேலூரில் முடி வெட்டிக் கொண்டு பணம் இல்லை என கூறிய இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை...

கொலை செய்த விஜயராகவன்

கொலை செய்த விஜயராகவன்

Vellore | வேலூரில் சலூன் கடையில் முடி வெட்டிக் கொண்ட பிறகு கொடுப்பதற்கு பணம் இல்லை என கூறிய அசாம் மாநிலத்தவரை கழுத்து அறுத்துக் கொலை செய்தவர் கைது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Vellore, India
    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காந்திநகர் பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி கழுத்தில் வெட்டுப்பட்டு ரத்த காயத்துடன் ஒருவர் சாலையில் கிடந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் விருத்தம்பட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

    அங்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 24ம் தேதி அந்த நபர் உயிரிழந்தார். போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்த நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அபனி சரணியா என்பது தெரியவந்தது.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் குற்றவாளியைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில் கடந்த 22ம் தேதி அபனி சரணியா காட்பாடி இரயில் நிலையத்தில் இருந்து வெளியில் நடந்து வருவது பதிவாகியிருந்தது.

    கடைசியாக வேலூர் ஆக்ஸிலிம் கல்லூரி ரவுண்டனா அருகில் ஒரு சலூன் கடையில் உள்ளே செல்வது வரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் 40 நிமிடங்கள் கழித்து கழுத்தில் கையை வைத்துக்கொண்டு அபனி வெளியே ஓடி வந்துள்ளார்.

    போலீசார் சலூன் கடையில் பணியாற்றிய விஜயராகவன் என்பரை கைது செய்து விசாரித்ததில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. சம்பவத்தன்று சலூன் கடைக்கு சென்று முடிதிருத்தம் செய்த பின்பு அபனியிடம் பணம் கேட்டுள்ளார் விஜயராகவன். ஆனால் அவர் தன்னிடம் காசு இல்லை என சைகை மூலமாக கூறியுள்ளார்.

    Also see... புலியூர் பேரூராட்சி தலைவர் தேர்தல்.. கூட்டணி கட்சிக்கு துரோகம் - கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தர்ணா

    இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த விஜயராகவன் சவர கத்தியால் அபனி சரணியாவின் கழுத்தை அறுத்துவிட்டதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து விஜயராகவனை கைது செய்த போலீசார் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: செல்வம் , வேலூர் 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Murder case, Vellore

    அடுத்த செய்தி