ஹோம் /நியூஸ் /வேலூர் /

போலீசாரை தகாத வார்த்தையால் பேசிய வழக்கு... வேலூர் நீதிமன்றத்தில் முருகன் ஆஜர்

போலீசாரை தகாத வார்த்தையால் பேசிய வழக்கு... வேலூர் நீதிமன்றத்தில் முருகன் ஆஜர்

 முருகன், நளினி

முருகன், நளினி

Velur News : போலீசாரை தகாத வார்த்தையால் பேசியது தொடர்பான வழக்கு விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்தில் முருகன் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 30 ஆண்டுக்கு மேலாக வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முருகன் மற்றும் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த  நளினி உட்பட 6 பேர் கடந்த 11ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

  ஆனால் முருகன்  திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வேலூர் ஆண்கள் சிறையில் முருகன் கடந்தாண்டு உண்ணாவிரதம் இருந்தபோது காவல்துறையினரிடம் தகாத வார்த்தையில் பேசியதாகவும், காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  இந்நிலையில், இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. திருச்சி முகாமில் இருந்து முருகன் பலத்த பாதுகாப்புடன் வேலூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

  இதையும் படிங்க : ஒருமுறை பாதித்தவர்களை மீண்டும் 'மெட்ராஸ் ஐ' பாதிக்குமா? - கண் மருத்துவமனை இயக்குநர் விளக்கம்!

  இதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட நடுவர் நீதிமன்றம் 4 ல்  ஆஜர்படுத்தப்பட்டார். விடுதலையாகி காட்பாடியில்  உள்ள வீட்டில் தங்கி உள்ள நளினி முருகனை சந்திக்க நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற வளாகத்தில் இருவரும் சந்தித்து பேசினர்.

  வழக்கு விசாரணைக்கு பின்னர் இந்த மாதம் 29ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதன்  அடிப்படையில் மீண்டும் முருகனை திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமிற்கு காவல்துறையிடம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

  வேலூர் செய்தியாளர் - செல்வம்

  Published by:Karthi K
  First published:

  Tags: Tamilnadu