முகப்பு /செய்தி /வேலூர் / உஷார்.. ஓடும் ரயிலில் சார்ஜ் போட்டிருக்கும் செல்போன், லேப்டாப் திருட்டு.. காட்பாடியில் சிக்கிய ஆந்திர வாலிபர்

உஷார்.. ஓடும் ரயிலில் சார்ஜ் போட்டிருக்கும் செல்போன், லேப்டாப் திருட்டு.. காட்பாடியில் சிக்கிய ஆந்திர வாலிபர்

செல்போன் திருடி கைது செய்யப்பட்ட எம்பிஏ பட்டதாரி ஹரிஷ்

செல்போன் திருடி கைது செய்யப்பட்ட எம்பிஏ பட்டதாரி ஹரிஷ்

Kadpadi Cellphone Thefter Arrest | சித்தூரில் இருந்து காட்பாடி செல்லும் வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் தொடர்ந்து செல்போன்களை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Vellore, India

காட்பாடியில் இரவு நேரங்களில் ஓடும் ரயிலில் சார்ஜ் போட்டு இருக்கும் செல்போன் மற்றும் லேப்டாப்பை திருடும் எம்பிஏ பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு  ஓடும் ரயிலில் செல்போன்கள் திருடு போவதாக தொடர்ந்து புகார்கள் அதிகளவில் வந்தது. இதனையடுத்து காட்பாடி ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபடும் போது சந்தேகத்தின் அடிப்படையில்  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கெங்குரெட்டி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ் (29) என்கிற (MBA) பட்டதாரி வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

சித்தூரில் இருந்து காட்பாடி செல்லும் வழித்தடத்தில் இரவு நேரங்களில் ஓடும் ரயிலில் சார்ஜ் ஏற்றப்படும் செல்போன் மற்றும் லேப்டாப்புகளை பயணிகள் தூங்கும் பொழுது திருடுவது வழக்கமாக வைத்து கொள்வது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் பட்டதாரியை கைது செய்த ரயில்வே போலீசார் இவரிடம் இருந்து 6 செல்போன்கள், 1 லேப்டாப் ,5  ப்ளூடூத் ஹெட்செட் 2  ஏ டி எம் கார்டுகள் ஆகியவை  பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: செல்வம்

First published:

Tags: Crime News, Local News, Vellore