ஹோம் /நியூஸ் /வேலூர் /

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து விபரீத முடிவு.! விசாரணை தீவிரம்!

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து விபரீத முடிவு.! விசாரணை தீவிரம்!

தற்கொலை செய்துக் கொண்ட பாரதி

தற்கொலை செய்துக் கொண்ட பாரதி

duraimurugan brother daughter committed suicide | தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரரின் மகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Vellore, India

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவரது மகள் பாரதி (வயது 55). இவர் தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த நான்காம் தேதி அதிகாலையில் லத்தேரி அருகே பாரதி ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

உடனே இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் பாரதி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Also see...  மாணவனுக்கு கத்திக்குத்து.. நெல்லையில் பரபரப்பு!

தற்கொலைக்கான காரணம் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வாக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: செல்வம், வேலூர்

First published:

Tags: Commit suicide, Duraimurugan, Katpadi, Vellore