முகப்பு /செய்தி /வேலூர் / அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்வெட்டு - 2 ஊழியர்கள் பணியிட மாற்றம்

அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்வெட்டு - 2 ஊழியர்கள் பணியிட மாற்றம்

தமிழக அமைச்சர் துரைமுருகன்

தமிழக அமைச்சர் துரைமுருகன்

.ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியும் மின்சாரம் வராததால், வெகுநேரமாக காத்திருந்த அமைச்சர் துரைமுருகன் எரிச்சலடைந்தார்.

  • Last Updated :
  • Velur | Tamil Nadu

வேலூர் மாவட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மிதிவண்டி வழங்கும் விழாவில் பேசிக் கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்ட பிரச்சனையில் 2 உதவி  பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி கொண்டிருந்த போது மின் வெட்டு ஏற்பட்டதால், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் எரிச்சல் அடைந்தார். காட்பாடியில் உள்ள அரசு பள்ளி, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் துரைமுருகன், மேடையில் பேசிக் கொண்டிருந்த போது மின் தடை ஏற்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியும் மின்சாரம் வராததால், வெகுநேரமாக காத்திருந்த அமைச்சர் துரைமுருகன் எரிச்சலடைந்தார். இதையடுத்து, அவர் மிதிவண்டிகளை கொடுத்துவிட்டு, உடனடியாக வெளியேறினார்.

அமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது இவ்விதம் நடந்ததால் விழா மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

top videos

    செய்தியாளர் : செல்வம்

    First published:

    Tags: Tamil Nadu