முகப்பு /செய்தி /Vellore / இளம்பெண்ணுடன் ரகசியத் திருமணம்: சந்தேகத்தால் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற காதல் கணவன் கைது- வேலூரில் பரபரப்பு

இளம்பெண்ணுடன் ரகசியத் திருமணம்: சந்தேகத்தால் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற காதல் கணவன் கைது- வேலூரில் பரபரப்பு

வேலூர் காவல் நிலையம்

வேலூர் காவல் நிலையம்

Attempt Murder | வேலூரில், தான் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட மனைவியை கழுத்தறுத்து கொல்ல முயன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வேலூர்மாவட்டம், குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்தவர்      மகேந்திரன். அவரது மகள் யாஷினி (20). இவர் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனியார் கண் தொழில்நுட்பம் படித்து வரும் சதிஷ்குமார் (23) என்பவரும் காதலித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் காதலித்து சில மாதங்களுக்கு முன்னர் கோவில் ஒன்றில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்து கொண்டது இருவீட்டாருக்கும் தெரியாத இந்தநிலையில் காதல் மனைவி யாஷினி மீது சதிஷ்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சதிஷ், யாஷினி இருவரும் திருவலம் மார்க்கெட் பகுதியில் சந்தித்து பேசிய போது வாய்தகராறு ஏற்பட்டு யாஷினியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் பொதுமக்கள் அவனை பிடித்து திருவலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Also see...புதுச்சேரி: 64 அடி உயரத்தில் சிவன் சிலை அமைக்க பூமிபூஜை

படுகாயமடைந்த யாஷினி சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவலம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சதிஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காதல் மனைவியை கணவனே கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: செல்வம், வேலூர்.

First published:

Tags: Crime News, Girl Murder, Vellore